டெல்லி-டேராடூன் வந்தே பாரத் ரயில்

டெல்லி-டேரா­டூன் வந்தே பாரத் எக்ஸ் ­பி­ரஸ் ரயிலை பிர­த­மர் மோடி தொடங்கி வைத்­துள்­ளார். இது உத்­தரகாண்ட் மாநி­லத்­தின் முதல் வந்தே பாரத் ரயில் ஆகும்.

புது­டெல்லி: ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ள வேளையில் டெல்லி மற்­றும் டேரா­டூன் இடைேய முதல் ரயில் சேவை மே 29ஆம் தேதி தொடங்­கப்­படும் என்று ஐஆர்­சி­டிசி வலை­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்டு இருக்­கிறது.

டெல்­லி­யில் இருந்து புறப்­படும் வந்தே பாரத் ரயில் 302 கிலோ­மீட்­டர் தொலைவில் அமைந்து­உள்ள டேரா­டூ­னுக்கு நான்கு மணி 45 நிமி­டங்­களில் சென்­ற­டை­யும். வார நாட்­களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்­க­ளி­லும் வந்தே பாரத் ரயில் இயக்­கப்­பட இருக்­கிறது.

டெல்­லி­யில் இருந்து டேரா­டூ­னுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் பயணச்சீட்டு விலை ரூ. 1065 என்று நிர்­ண­யம் செய்­யப்­பட்டு உள்­ளது. எக்­சிக்­யூ­டிவ் சேர் கார் பயணச் சீட்டின் விலை ரூ. 1890 ஆகும். இந்த ரயில் ஆனந்த் விகார் ரயில் நிலை­யத்­தில் இருந்து 17.50 (மாலை 5.50) மணிக்குப் புறப்­பட்டு டேரா­டூனுக்கு 22.35 (இரவு 10.35) மணி அள­வில் சென்­ற­டை­யும். டேரா­டூ­னில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்­படும் வந்தே பாரத் ரயில் ஆனந்த விகார் ரயில் நிலை­யத்­திற்கு 11.45 மணிக்கு வந்­த­டை­யும். தற்­போ­தைய நிதி­யாண்­டில் ஆறு வந்தே பாரத் ரயில்­கள் ராணி கம­லா­பேட்-ஹச­ரட் நிசா­மு­தீன், செகந்­த­ரா­பாத்- திருப்­பதி, சென்னை - கோயம்­புத்­தூர், அஜ்­மீர்- டெல்லி கண்­டோன்­மெண்ட், திரு­வ­னந்­த­பு­ரம் செண்ட்­ரல்-காசர்­கோட், ஹவுரா- பூரி ஆகிய வழித்­த­டங்­களில் இயக்கப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!