இரு மருத்துவர்கள் மீது தாக்குதல்

1 mins read
dc05b9aa-396a-4295-8829-649a8455757c
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தில் கொல்­லத்தை அடுத்­துள்ள கொட்­டா­ரக்­கரா அரசு மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் பெண் மருத்­து­வர் வந்­த­னாவை, சிகிச்­சைக்கு வந்த விசா­ர­ணைக் கைதி கொடூ­ர­மாக குத்தி கொலை செய்­தார்.

இந்த சம்­ப­வத்­திற்கு கண்­ட­னம் தெரி­வித்து மாநி­லம் முழு­வ­தும் மருத்­து­வர்­கள் போராட்­டம் நடத்­தி­ய­தால் அரசு மருத்­து­வர்­கள், மருத்­து­வ­ம­னைத் தாக்­கு­த­லில் ஈடு­ப­டு­வோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்க புதிய அவ­சர சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வுப்­படி இந்­தச் சட்­டம் ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பப்­பட்டு நேற்று முன்­தி­னம் அவர் ஒப்­பு­தல் அளித்­தார்.

இந்த சட்­டம் அம­லுக்கு வந்த நாளி­லேயே கேர­ளா­வில் மீண்­டும் மருத்­து­வர்­கள் தாக்­கப்­பட்­டுள்­ள­னர். திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள அரசு மருத்­துவக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யின் நரம்­பி­யல் துறைக்கு சுதீர் என்ற வாலி­பர் சிகிச்­சைக்­குச் சென்­றார்.

ஆனால் அவ­ருக்கு சரி­யான சிகிச்சை அளிக்­க­வில்லை என புகார் கூறிய சுதீர் திடீ­ரென அங்­கி­ருந்த இரு மருத்­து­வர்­க­ளைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து மருத்­து­வர்­கள் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து காவல்­து­றை­யி­னர் சம்­ப­வத்தை விசா­ரித்து வரு­கின்­ற­னர்.