திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திற்குச் சுற்றுலா சென்ற நாமக்கல் பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.
திரிச்சூர் மாவட்டம், பாலக் காடு எர்னாவரம் நெடுஞ்சாலை யில் உள்ள சுங்கச்சாவடி அருகே பழுதாகி நின்ற லாரி மீது சுற்று லா பேருந்து அதிகாலை 4 மணி அளவில் மோதியது. இந்தப் பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த நாமக்கல் ஐடிஐ மாணவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர் படுகாயமடைந்தனர்.
ஓட்டுநர் தூக்கத்துடன் பேருந்தை ஓட்டியதால் விபத்து நேர்ந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
விபத்தில் பேருந்து ஓட்டுநர் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் கடும் முயற்சிகளுக்குப் பிறகு ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் படுகாயமடைந்த ஐந்து பேர் தனியார் மருத்துவமனை யிலும் 18 பேர் திரிச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டனர்.
மாணவர்களின் உயிருக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று காவல்துறையினர் கூறி உள்ளனர்.

