கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்

2 mins read
8b6715eb-5482-4eb3-b315-a9f03fb83e26
-

புது­டெல்லி: கர்­நா­ட­கா­வில் நாளை அமைச்­ச­ரவை விரி­வாக்­கம் செய்­யப்­பட உள்­ள­து. 24 பேர் அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்க உள்­ள­னர்.

யாருக்கு எந்­தெந்த அமைச்­சு­க­ளைக் கொடுப்­பது என்­பது குறித்து முடி­வெ­டுப்­ப­தற்­காக கர்­நா­டக முதல்­வர் சித்­த­ரா­மை­யா­வும் துணை முதல்­வர் டி.கே.சிவ­கு­மா­ரும் காங்­கி­ர­சின் தேசிய தலை­வர்­க­ளைச் சந்­தித்து ஆலோ­சனை நடத்த நேற்று இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லிக்­குச் சென்­ற­னர்.

அங்கு காங்­கி­ரஸ் கட்­சி­யின் தேசிய தலை­வர்­க­ளு­டன் நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­யில் யாருக்கு என்ன துறை வழங்­கு­வது என்­பது குறித்து இறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, இவர்­கள் 24 பேரும் நாளை அமைச்­சர்­க­ளாக பதவி ஏற்க உள்­ள­னர்.

இதை முன்­னிட்டு, டெல்லி சென்­றுள்ள கர்­நா­டக முதல்­வர் சித்­த­ரா­மையா, துணை முதல்­வர் டி.கே.சிவ­கு­மார் ஆகி­யோர் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் சோனியா காந்­தி­, ராகுல் காந்­தி­, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரைச் சந்­தித்­துப் பேசி­யது குறித்து முதல்­வர் சித்­த­ரா­மையா தனது டுவிட்­டர் பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார்.

காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்­கே­வின் மகன் பிரி­யங்க் கார்கே உள்­பட 24 பேர் அமைச்­சர்­க­ளா­கத் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைக்கு மே 10ஆம் தேதி நடை­பெற்ற தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்சி மொத்­த­முள்ள 224 தொகு­தி­களில் 135 தொகு­தி­க­ளைக் கைப்­பற்றி அறு­திப்­பெ­ரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைத்­துள்­ளது.

முதல்­வ­ராக சித்­த­ரா­மை­யா­வும், துணை முதல்­வ­ராக டி.கே. சிவ­கு­மா­ரும் கடந்த 20ஆம் தேதி பத­வி­யேற்­றுக்­கொண்­ட­னர்.

இதை­ய­டுத்து, கடந்த மே23 ஆம் தேதி கர்­நா­டக சட்­டப்­பே­ரவை சபா­நா­ய­கர் தேர்வு செய்­யப்­பட்­டார்.

காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் 5 முறை சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்வு செய்­யப்­பட்ட யு.டி. காதர், கடந்த 24ஆம் தேதி சபா­நா­ய­க­ராக ஒரு­ம­ன­தாகத் தேர்வு செய்­யப்­பட்­டார்.

இந்நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது.