திருவனந்தபுரம்: கேரளாவின் கொச்சி விமான நிலையத்திற்கு இலங்கையிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய தம்பதி மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் நடத்திய சோதனையில் உடலில் 'கேப்ஸ்யூல்'கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் சுமார் 1,202.55 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தி வந்ததாக இலங்கை தம்பதியை அதி காரிகள் கைது செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

