புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்க இந்திய அரசியல் கட்சிகள் பல்வேறு வழிகளில் போராடி வருகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி இம்மாதம் 29ஆம் தேதி அமெரிக்காவுக்கான பயணத்தைத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இம்மாதம் 30ஆம் தேதி சான் ஃபிரான்சிஸ்கோவிலும் ஜூன் 4ஆம் தேதி நியூயார்க்கிலும் புலம் பெயர்ந்த இந்தியர்களைச் சந்திக்கிறார். இந்திய அரசியல் கட்சிகள் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக வெளிநாட்டில் வாழும் 32 மில்லியன் இந்தியர்களை ஈர்க்க உலகளவில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி வெளிநாடு வாழ் இந்தியர்களை தொடர்ந்து ஈர்த்து ஒரு நிலையான சூழலில் உள்ளது.
கடந்த மே 23ஆம் தேதி சிட்னியில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். காங்கிரஸ் கட்சியும் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தி வருகிறது.