விபத்தில் ஏழு மாணவர்கள் உயிரிழப்பு

விபத்தில் ஏழு மாணவர்கள் உயிரிழப்பு

1 mins read
4d2f5746-e761-48fd-b3d9-82776d2c58d4
-

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில் உள்ள ஜலுக்பரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர், ஆறு பேர் காயமடைந்தனர் என்று கவுகாத்தியின் இணை காவல் ஆணையர் துபே பிரதீக் விஜய்குமார் ஏஎன்ஐ ஊடகத்திடம் தொலைபேசியில் பேசியபோது தெரிவித்தார்.

அசாரா பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று சாலைத் தடுப்பில் மோதி எதிர் திசையில் வந்த சரக்கு வாகனம் மீது மோதியது. உயிரிழந்த வர்கள் அசாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என காவலர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.