ஆந்திரா: திருப்பதியில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளைக் கடத்தியதாக இரு வேறு சம்பவங்களில் இரு தமிழர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடப்பா மாவட்டம், வாணிபெண்டா வனப்பகுதிக்கு உட்பட்ட திப்பிரெட்டிப்பள்ளி பகுதியில் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படைக் காவலர்கள் குழுவாகச் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் தோளிலும் தலையிலும் செம்மரக்கட்டைகளைச் சுமந்துகொண்டு சென்று கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றி வளைத்த காவலர்கள் 16 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 செம்மரக் கட்டைகள், ஒரு சரக்கு ஆட்டோ, இரு மோட்டார் சைக்கிள்கள், 13 இரும்புக் கோடரிகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்கள் அனந்தபுரம் மாவட்டம், திருவண்ணாமலை அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

