ஆந்திராவிலும் வாக்குறுதி
புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னுதாரணமாகக்கொண்டு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை, 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வழங்குவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆந்திராவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசக் கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு முதல்கட்ட தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 20,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
வயல்வெளியில் ஹெலிகாப்டர்
பிந்த்: மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் வயல்வெளியில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயல்வெளியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

