157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சித் தகவல்

157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சித் தகவல்

1 mins read
3f8d2231-c31a-4c37-90a9-fcf14738d698
-

காந்­தி­ந­கர்: குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள தாஹோத் மாவட்­டத்­தில் தேர்வெழுதிய மாண­வர்­கள் மிக­வும் குறைந்த அள­விலேயே தேர்ச்சி அடைந்துள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதிலும், இங்­குள்ள 157 பள்­ளி­களில் பயி­லும் மாண­வர்­களில் ஒரு­வர்கூட தேர்ச்சி பெற­வில்லை என்ற அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இம்­மா­நி­லத்­தின் தாய்­மொழி­யான குஜ­ராத்­தி­யில் 96,000 மாண­வர்­கள் தோல்வி அடைந்­துள்­ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத்தில் வெளியான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஒட்டுமொத்தமாக 64.62 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநி­லத்­தின் சூரத் மாவட்­டத்­தில் அதி­க­பட்­ச­மாக 76 விழுக்­காட்­டினரும் மிகக்குறைந்த அளவில் தாஹோத் மாவட்டத்தில் 40 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

272 பள்­ளி­களில் 100 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்­றுள்ளனர். 1,084 பள்­ளி­களில் 30 விழுக்காட்டுக்­கும் குறை­வான தேர்ச்சி விகி­தம் பதி­வாகி இருக்­கிறது.

இதில் மிக­வும் அதிர்ச்சியூட்டும் விதமாக 157 பள்­ளி­ மாண­வர்­களில் ஒரு­வர்கூட தேர்ச்சி பெற­வில்லை. மறு தேர்­வுக்கு விண்­ணப்­பித்த 165,690 மாண­வர்­களில் 27,446 பேர் மட்­டுமே தேர்ச்சி பெற்­றுள்­ள­னர்.

மாநி­லத்­தின் தாய் மொழி­யான குஜ­ராத்­தி பாடத்தில் 96,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதேபோல் கணிதப் பாடத்தில் 196,000 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.­ வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகளே அங்கு அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.