மல்யுத்த வீரர்கள்: நாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் எறிவோம்

மல்யுத்த வீரர்கள்: நாட்டுக்காக நாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் எறிவோம்

2 mins read
861019f2-abe9-4515-9898-4a41b7dbae67
-

புது­டெல்லி: பார­திய ஜனதா கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்­திய மல்­யுத்த சம்­மே­ள­னத்­தின் தலை­வ­ரு­மான பிரிஜ்­பூஷண் சரண்­சிங் மீதான பாலி­யல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி மல்­யுத்த வீராங்­க­னை­கள் கடந்த ஏப்­ரல் 23ஆம் தேதி முதல் ஜந்­தர் மந்­த­ரில் போராட்­டம் நடத்தி வந்­த­னர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போக்சோ உள்­ளிட்ட பிரி­வு­களில் வழக்­குப்­ப­திவு செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை.

தொடர்ச்­சி­யா­கப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டும், அர­சாங்­கம் எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்­ப­தால் கடந்த 28ஆம் தேதி நாடா­ளு­மன்­றப் புதிய கட்­ட­டத் திறப்­பு­வி­ழா நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது அக்­கட்­ட­டத்தை நோக்­கிப் பேரணி வகுத்­துச்­சென்­ற­னர். அப்­போது தடுத்­து­நி­றுத்­திய காவல்­து­றை­யி­ன­ருக்­கும் மல்­யுத்த வீரர்­க­ளுக்­கும் இடையே தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. அதை­ய­டுத்து மல்­யுத்த வீரர்­களை அவர்­கள் கைது­செய்­த­னர்.

ஒலிம்­பிக் விளை­யாட்­டில் நாட்­டிற்­கா­கப் பதக்­கங்­கள் வென்ற பஜ்­ரங் புனியா மற்­றும் சாக்சி மாலிக் உள்­ளிட்­டோர் மீது வழக்­கும் பதிவு செய்­யப்­பட்­டது. டெல்லி முழு­வ­தும் 700 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் மல்­யுத்த வீரர்­கள் உருக்­க­மான அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ள­னர். "நாட்­டுக்­காக நாங்­கள் அரும்­பா­டு­பட்டு வென்று வந்த பதக்­கங்­களை கங்கை நதி­யில் வீசப்­போகி­றோம்," என்­ப­து­தான் அந்த அறி­விப்பு. ஹரித்­வா­ருக்கு பேர­ணி­யாகச் சென்று மாலை 6 மணிக்கு நதி­யில் பதக்­கங்­களை வீசி எறி­யப்­போ­கி­றோம் என்று கூறி­னர். மேலும் இந்­தியா கேட்­டில் உண்­ணா­வி­ர­தம் நடத்­தப்போவ­தா­க­வும் தெரி­வித்தனர்.

"ஜந்­தர் மந்­த­ரில் 38 நாட்­கள் போராட்­டம் நடத்­திய அவர்­கள், 28ஆம் தேதி சட்­டத்தை மீறி­விட்­ட­னர். எனவே அவர்­களை அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டி­ய­தாகி விட்­டது. இனி அவர்கள் ஜந்­தர் மந்­த­ரில் போரா­டு­வ­தற்கு அனு­மதி இல்லை," என்று காவல்­துறை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜந்­தர் மந்­த­ரில் மல்யுத்த வீரர்களால் அமைக்­கப்­பட்ட கொட்­ட­கை­கள் அனைத்­தும் அகற்­றப்­பட்­டன.

இந்­நி­லை­யில், முன்­னாள் அர­சாங்க ஊழி­யர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், எழுத்­தா­ளர்­கள் என 1,150க்கு மேற்­பட்ட சமூக ஆர்­வ­லர்­கள் மல்­யுத்த வீரர்­க­ளுக்கு ஆத­ர­வா­கக் குரல் கொடுத்­துள்­ள­னர். இது­கு­றித்து அவர்­கள் ஒன்­றி­ணைந்து ஓர் அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­னர். அதில் மூன்று கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­னர். அதா­வது, பிரிஜ்பூஷண் ஷரன் சிங் கைது­செய்­யப்­ப­ட­வேண்­டும். போராட்­டம் தொடர்­பாக கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் விடுவிக்கப்பட வேண்டும், அநீ­திக்கு எதி­ராக குரல்­கொ­டுப்பது மக்களின் உரிமை. அதற்கு அர­சாங்­கம் மதிப்­ப­ளிக்­க­வேண்­டும் என்று அவர்­கள் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ள­னர்.