வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடினமாக நாம் உழைப்போம்

வளர்ந்த இந்தியாவை உருவாக்க கடினமாக நாம் உழைப்போம்

2 mins read
859b18f0-f78d-4bf9-b732-a6b5d2105e6c
-

ஒன்பது ஆண்டுகள் நிறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி

புது­டெல்லி: "இந்­திய மக்­கள் அனை­வ­ரது வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்த வேண்­டும். இந்த விருப்­பத்தை முன்­னி­லைப்­ப­டுத்­தியே எனது நட­வ­டிக்­கை­களும் அது­சார்ந்த முடி­வு­களும் வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றன," என்று பிர­த­மர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்­ளார்.

மோடி பிர­த­ம­ராகப் பத­வி­யேற்று இன்­று­டன் (மே 30) 9 ஆண்­டு­கள் நிறை­வ­டை­வ­தைத் தொடர்ந்து அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தனது டுவிட்­டர் பக்­கத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை அவர் வெளி­யிட்­டுள்ள பதி­வில்,

"இந்த நாட்­டுக்கு சேவை­யாற்­றும் பணி­யில் ஈடு­பட்டு ஒன்­பது ஆண்­டு­களை நிறை­வு­செய்­துள்­ளோம். அந்­தக் கால­கட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட ஒவ்­வொரு முடி­வும் அது சார்ந்த நட­வ­டிக்­கை­யும் மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்­தின் முன்­னேற்­றத்­தைக் கருத்­தில் கொண்­ட­வையே. வளர்ந்த நாடாக இந்­தி­யாவை உரு­வாக்க நாம் மேலும் கடு­மை­யாக உழைக்­க­வேண்­டும்," எனக் கூறினார்.

பார­திய ஜனதா கட்­சி­யின் 9 ஆண்­டு­கள் ஆட்சி நிறைவை பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளு­டன் செவ்­வாய்க்­கி­ழ­மை­யில் இருந்து ஒரு மாதம் நீண்ட பிர­சா­ர­மாக கொண்­டாட அக்­கட்சி முடிவு செய்­துள்­ளது.

பிர­த­மர் மோடி புதன்­கி­ழமை ராஜஸ்­தா­னில் நடை­பெற உள்ள பேர­ணி­யில் கலந்துகொள்ள இருக்­கி­றார். 'தேசமே பிர­தா­னம்'என்ற தாரக மந்­தி­ரத்­து­டன் அனைத்­துத் துறை­க­ளி­லும் இது­வரை இல்­லாத அள­விற்கு நாடு முன்­னேற்­றம் அடைந்­துள்­ளது என்று அக்­கட்­சி­யின் அறிக்கை ஒன்­றில் கூறப்­பட்­டுள்­ளது.

மத்­திய அமைச்­சர்­கள் உள்­ளிட்ட பாஜக மூத்த தலை­வர்­கள், மாநில முதல்­வர்­கள் நாடு தழு­விய அள­வில் அர­சின் வளர்ச்­சித் திட்­டங்­கள் குறித்து திங்­கள்­கி­ழமை அவர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.

நரேந்­திர மோடி, முதல் முறை­யாக 2014ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிர­த­ம­ராக பதவி ஏற்­றுக்­கொண்­டார்.

2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி இரண்­டா­வது முறை­யாக பதவி ஏற்­றுக்­கொண்­டார்.