ஓடும் காரில் தண்டால் போட்ட சாகசக்காரர் கைது

ஓடும் காரில் தண்டால் போட்ட சாகசக்காரர் கைது

1 mins read
712e6036-edfc-4e7c-8637-4cc5f9527217
-

குரு­கி­ராம்: சாலை­யில் சென்று கொண்­டி­ருந்த ஒரு காரின் மேற்பகுதியில் ஆட­வர் ஒரு­வர், விளை­யாட்­டுத் திட­லில் தண்­டால் (புஷ்-அப்ஸ்) செய்­வ­தைப்­போல் செய்­து­கொண்­டி­ருந்­தார். காரில் பய­ணம் செய்த இன்­னொ­ரு­வர் அவ்­வப்­போது தலையை வெளியே எட்­டிப்­பார்த்­த­படி இருந்­தார்.

அந்­தச் சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்த வாக­னங்­கள் எல்­லாம் அப்­ப­டியே நின்­று­போ­யின. அத­னால் அங்கு நீண்­ட­நே­ரம் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

அந்­தக் கண்­கொள்­ளாக் காட்­சியைப் பல­ரும் காணொ­ளி­யா­கப் படம்­பி­டித்­த­னர். அதை சமூக ஊட­கங்­களில் பகிர்ந்து­கொண்­ட­னர். அந்­தக் காணொ­ளி­யைப் பார்த்து ஆச்­ச­ரி­யப்­பட்டு, அந்த ஆட­வ­ரின் சாக­சச் செயலை சிலர் வியப்­பு­டன் பாராட்­டி­னர். ஆனால், பலர் அந்த ஆட­வ­ரைத் திட்­டித் தீர்த்­த­னர். அவர்­களில் சிலர், அந்­தக் காணொளி குறித்து காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் ஹரி­யானா மாநி­லத்­தின் குரு­கி­ராம் என்ற ஊரின் முக்­கிய சாலை ஒன்­றில் நிகழ்ந்­தது. போக்­கு­வ­ரத்­துப் பாதிக்­கப்­பட்­ட­தால், அந்­தப் பகு­திக்கு விரைந்த போக்­கு­வ­ரத்­துக் காவ­லர்­கள் அவரை கார் மீதி­ருந்து இறக்கி கைது­செய்து அழைத்­துச்­சென்­ற­னர்.

பொது இடத்தில் ஆபத்தை விளை­விக்­கும் நோக்­கில் நடந்­து­கொண்ட அந்த ஆட­வ­ருக்கு ரூ.6,500 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. போக்­கு­வ­ரத்து விதியை மீறி­ய­தாக அந்த காரை போக்கு­வரத்­துக் காவல்­துறை பறி­மு­தல் செய்­தது. இந்­தச் சம்­ப­வம் குறித்து காரின் உரி­மை­யா­ள­ரி­டம் காவல்­துறை விசா­ர­ணையை முடுக்­கி­விட்­டுள்­ளது. வாக­ன­மோட்­டி­கள் இது­போன்று பொது­மக்­க­ளுக்கு ஆபத்து விளை­விக்­கும் சாகச செயல்­க­ளுக்கு உடந்­தை­யாக இருக்­கக்­கூ­டாது என்­றும் யாரும் இது­போன்ற முட்­டாள்­த­ன­மான செயல்­க­ளி­ல் ஈடு­ப­டக்­கூ­டாது என்­றும் காவல்­துறை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.