'சிவசேனாவில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பலர் விரைவில் வெளியேறுவர்'

'சிவசேனாவில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் பலர் விரைவில் வெளியேறுவர்'

1 mins read
efb27fa3-f51c-4962-be4f-6f6e86ee63a5
-

மும்பை: சிவ­சே­னா­ கட்சியில் இருந்து வெளி­யேற 22 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எப்­போது வேண்­டு­மா­னா­லும் வெளி­யே­றக்­கூ­டும் என்று உத்­தவ் சிவ­சேனா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விநா­யக் ராவத் (படம்) கூறி­யுள்­ளார்.

தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்று உள்ள போதும், ஏக்­நாத் ஷிண்டே தலை­மை­யி­லான சிவ­சேனா கட்­சியை பார­திய ஜனதா கட்சி மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன் நடத்­து­வ­தாக அந்த கட்­சி­யின் மூத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜ­னன் கிரித்­தி­கர் குற்­றம்­சாட்டி இருந்­தார்.

இந்­த­நி­லை­யில் ஏக்­நாத் ஷிண்டே சிவ­சே­னா­வில் அதி­ருப்­தி­யில் உள்ள 22 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்கள் அக்­கட்­சி­யில் இருந்து வெளி­யேற தயா­ராக இருக்­கின்­ற­னர்.

அதே­போல் அக்­கட்­சி­யில் இருக்­கும் பதின்­மூன்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒன்­பது பேர் உத்­தவ் தாக்­கரே சிவ­சே­னா­வு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் அந்­தக் கட்­சியைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விநா­யக் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

"மாநில அமைச்­சர் சம்­பு­ராஜி தேசாய், கட்சி மீதான அதி­ருப்தி குறித்து 15 நாள்­க­ளுக்கு முன் உத்­தவ் தாக்­க­ரேக்கு குறுந்­த­க­வல் ஒன்றை அனுப்பி உள்­ளார்," என கூறி­யுள்­ளார்.

உத்­தவ் தாக்­க­ரேக்கு குறுந்­த­க­வல் அனுப்­பி­ய­தா­கக் கூறப்­படும் தக­வலை அமைச்­சர் சம்­பு­ராஜி தேசாய் மறுத்து உள்­ளார்.

மேலும் தவ­றான தக­வலை கூறி­ய­தற்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விநா­யக் ராவத் மன்­னிப்புக் கேட்க வேண்­டும் அல்­லது அவர் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்­பேன் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.