2024 சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ஜெகன் ஆலோசனை

2024 சட்டமன்றத் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோருடன் முதல்வர் ஜெகன் ஆலோசனை

1 mins read
825f3634-bfff-487c-813f-70875bdb5149
-

அம­ரா­வதி: தேர்­தல் வியூக நிபு­ணர் பிர­சாந்த் கிஷோ­ரு­டன் ஆந்­திர முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி மே 30ஆம் தேதி டெல்­லி­யில் ஆலோ­சனை நடத்­தி­னார் (படம்). இதில் வரும் ஆந்­திர சட்­டப்­பே­ரவை தேர்­த­லில் ஆளும்­கட்­சி­யின் 25 சட்டமன்ற உறுப்­பினர்­க­ளுக்­குப் பதி­லாக புதிய வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிய­வந்­துள்­ளது.

பிர­சாந்த் கிஷோ­ரின்­ கு­ழு­வி­னர் ஆந்­தி­ரா­வில் 175 தொகு­தி­க­ளி­லும் தேர்­த­லுக்கு முந்­தைய ஆய்­வுப் பணி­களை மேற்­கொண்­ட­தா­க­வும் இதில் ஆளும் கட்­சி­யின் 25 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களின் பணி திருப்­தி­க­ர­மாக இல்லை என்று அறிக்கை வழங்கி­யி­ருப்­ப­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது. இத­னால் வரும் 2024 தேர்­த­லில் இவர்­கள் 25 பேருக்­கும் 'சீட்' இல்லை என்­பது திட்­ட­வட்­ட­மாகி உள்­ளது.