மோடி: இருதரப்பு உறவு இமாலய உயரத்தை எட்டும்

1 mins read
6c13279e-442f-484a-a447-c52c771a52d1
-

இந்தியா, நேப்பாளம் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புது­டெல்லி: இந்­தியா, நேப்­பா­ளம் இடை­யே­யான உறவை இமா­லய உய­ரத்­துக்கு எடுத்­துச்­செல்­வ­தற்கு இரு நாடு­களும் தொடர்ந்து பாடு­படும் எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

இதே உணர்­வு­டன் செயல்­பட்டு எல்­லைப் பிரச்­சினை உள்­ளிட்ட அனைத்து விவ­கா­ரங்­க­ளுக்­கும் உரிய தீர்வு காணப்­படும் என அவர் குறிப்­பிட்­டார்.

"கலா­சார, ஆன்­மிக உற­வு­களை மேலும் பலப்­ப­டுத்­தும் விதத்­தில், நானும் நேப்­பாள பிரதமர் பிர­சண்­டா­வும் பல்­வேறு திட்­டங்­களை விரை­வு­ப­டுத்த முடிவு செய்­துள்­ளோம்," என்­றார் பிர­த­மர் மோடி.

நேப்­பாள பிர­த­மர் புஷ்­ப­க­மல் தஹல் பிர­சண்டா நான்கு நாள் அதி­கா­ரத்­துவ பய­ண­மாக புது­டெல்லி வந்­துள்­ளார்.

கடந்த டிசம்­பர் மாதம் நேப்­பாள பிர­த­ம­ரா­கப் பத­வி­யேற்­றுக் கொண்ட பின்­னர் அவர் இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வது இதுவே முதன் முறை­யா­கும்.

இதை­ய­டுத்து அவர் பிர­த­மர் மோடி­யைச் சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை மேற்­கொண்­டார் (படம்).

அதன் தொடர்ச்­சி­யாக வர்த்­த­கம், எரி­சக்தி உள்­ளிட்ட துறை­களில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை அதி­க­ரிப்­ப­தற்கு ஏது­வாக ஏழு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­யின.

மேலும் இரு நாடு­க­ளுக்­கும் இடை­யே­யான சரக்கு ரயில் போக்­கு­வ­ரத்தை தொடங்கி வைத்த இரு தலை­வர்­களும் எல்­லைப் புறங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள ஒருங்­கி­ணைந்த சோத­னைச் சாவடி­க­ளை அதிகாரபூர்வமாகத்­ திறந்து வைத்­த­னர்.