மதுபானக் கொள்கை வழக்கு: அரசு சாட்சியாக மாறிய தொழிலதிபர்

மதுபானக் கொள்கை வழக்கு: அரசு சாட்சியாக மாறிய தொழிலதிபர்

1 mins read
40cc2d67-a39d-4523-b100-ceee18d26cd6
-

புது­டெல்லி: டெல்லி அர­சின் மது­பா­னக் கொள்கை முறை­கேடு தொடர்­பான வழக்­கில், குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள தொழில் அ­தி­பர் ஷரத் சந்­திரா ரெட்டி, அரசு தரப்பு சாட்­சி­யாக மாறி­யுள்­ளார்.

இத­னால் இந்த வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள தெலுங்­கானா முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவின் மக­ளான கவி­தா­வுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

ஐத­ரா­பாத்­தைச் சேர்ந்த ஷரத் சந்­திரா ரெட்டி, அரசு சாட்­சி­யாக மாறு­வ­தற்கு டெல்லி நீதி­மன்­றம் கடந்த வியா­ழக்­கி­ழமை அனு­மதி வழங்­கி­யது.

இது தொடர்­பாக அவ­ரது வழக்­க­றி­ஞர் மூலம் தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை பரி­சீ­லனைக்கு ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் அதன் முடி­வில் அவ­ரது கோரிக்கை ஏற்­கப்­பட்­ட­தா­க­வும் டெல்லி நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

டெல்லி மாநில அர­சின் மது­பா­னக் கொள்­கை­யால் அர­சுக்கு பெரும் வரு­வாய் இழப்பு ஏற்­பட்­ட­தாக அம­லாக்­கத்­துறை குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

இந்த முறை­கேடு தொடர்­பாக ஷரத் சந்­திரா ரெட்டி உள்­ளிட்ட தொழி­ல­தி­பர்­கள் பல­ன­டைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, இதே வழக்­கில் டெல்லி முன்­னாள் துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா கைதாகி உள்­ளார்.

இந்நிலையில், ஷரத் சந்திரா ரெட்டி திடீரென அரசு சாட்சியாக மாறியிருப்பது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் தெலுங்கானா முதல்வர் மகள் கவிதாவுக்கு நெருக்கடி ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.