தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நாடு தழுவிய விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும்'

1 mins read
1c8b5b3f-2049-4544-9a00-6808d045cc87
-

புதுடெல்லி: பாலியல் குற்றச் சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரை வரும் 9ஆம் தேதிக்குள் கைது செய்யாவிட்டால் டெல்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் மல்யுத்த வீரர்களுடன் போராட்­டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், இந்­திய மல்யுத்த சம்­மே­ள­னத் தலை­வ­ரும் பாஜக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிரிஜ் பூஷண் சரண்சிங், 66, மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹரியானாவில் விவசாயிகள் நடத்திய மகா பஞ்சாயத்தில், ஒரு வாரத்திற்குள் பிரிஜ் பூஷண் கைது செய்யப்படவில்லை எனில் நாடுதழுவிய போராட்டங்கள் நடத்தப்படும். வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெற நடைபெற்ற போராட்டங்களைப்போல் இப்போராட்டத்துக்கான மகா பஞ்சாயத்தும் நடைபெறும் என்று பாரதிய கிசான் யூனியனின் தலைவா் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.