இந்தியாவை உலுக்கிய ஆக மோசமான ரயில் விபத்துகள்

இந்தியாவை உலுக்கிய ஆக மோசமான ரயில் விபத்துகள்

1 mins read
aec117b5-bcd2-463e-af93-9a90a896b4f6
-

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்துகள் பற்றிய விவரங்கள்:

 பீகா­ரில் 1981ல் நடந்த ரயில் விபத்து இந்­தி­யா­வின் ஆக மோச மான விபத்­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. பாக்­மதி ஆற்­றுப் பாலத்­தில் சென்­று­கொண்­டி­ருந்த ரயில் தடம் புரண்டு ஆற்­றில் கவிழ்ந்த தில் 286 உடல்­கள் மட்­டும் மீட்­கப் பட்­டா­லும் ஏறக்­கு­றைய 800 பேர் வரை இறந்­தி­ருக்­க­லாம் என கரு­தப்­ப­டு­கிறது.

 உத்­த­ரப் பிர­தே­சத்­தின் ஃபிரோசா­பாத்­தில் 1995ல் பழு­தாகி நின்­று­கொண்­டி­ருந்த விரைவு ரயில் மீது பின்­னால் வந்த மற்­றொரு விரைவு ரயில் மோதி­ய­தில் 358 பய­ணி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

 பஞ்­சாப்­பில் 1998ல் தடம்­பு­ரண்டு நின்ற ரயில் மீது விரைவு ரயில் மோதிய விபத்தில் 212 பேர் இறந்­த­னர்.

 மேற்கு வங்­கா­ளத்­தில் 1999ல் பிரம்­ம­புத்ரா ரயி­லும் அசாம் விரைவு ரயி­லும் நேருக்கு நேர் மோதி­ய­தில் ஏறக்­கு­றைய 300 பய­ணி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

 இப்­போது 2023ல் ஒடி­சா­வில் நிகழ்ந்­துள்ள இந்த ரயில் விபத்­தில் 288 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். 900க்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வில் நடை­பெற்ற ரயில் விபத்­து­களில் 57 விழுக்­காடு விபத்­து­கள் ஊழி­யர்­க­ளின் கவ­னக்­கு­றை­வால் நேரிட்­டவை என்று ரயில்வே வாரி­யம் தெரி­வித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.