நெருங்கி வரும் கட்சிகள்: அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

நெருங்கி வரும் கட்சிகள்: அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

1 mins read
81b89c37-350e-4c0f-b706-9c2912a8c407
-

புது­டெல்லி: ஆந்­திர முன்­னாள் முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு தமது டெல்லி பய­ணத்­தின்­போது மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, பாஜக தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்டா ஆகி­யோரை சந்­தித்­துப் பேசி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து பாஜக, தெலுங்கு தேசம் கட்­சி­கள் இடையே கூட்டணி மலர வாய்ப்­புள்­ள­தாக அரசியல் கவ­னிப்­பா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நடப்­பாண்டு இறு­தி­யில் தெலுங்­கானா மாநி­லத்­தில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. அதை­ய­டுத்து அடுத்த ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடை­பெற இருப்­ப­தால், அங்கு கூட்­ட­ணி­யைப் பலப்­ப­டுத்­து­வ­தில் அர­சி­யல் கட்­சி­கள் மும்­முரம் காட்டி வரு­கின்­றன.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் தெலுங்கு தேசம் இடம்­பெற்­றி­ருந்­தது. அடுத்த தேர்­த­லில் அக்­கூட்­ட­ணி­யில் இருந்து விவ­கி­னார் சந்­தி­ர­பாபு நாயுடு.

இந்­நி­லை­யில் இரு ­கட்­சி­களும் மீண்­டும் நெருங்கி வரு­கின்­றன. எனவே தெலுங்­கானா சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் நடப்பு முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவுக்கு நெருக்­கடி ஏற்­ப­டுத்­தும் வித­மாக பாஜ­க­வும் தெலுங்கு தேசம் கட்­சி­யும் இணைந்து செயல்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், மத்­திய உள்துறை அமைச்­ச­ரை­யும் பாஜக தேசி­யத் தலை­வ­ரை­யும் அடுத்தடுத்து சந்­தித்­துப் பேசி­உள்­ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு.

இரு­வ­ரு­ட­னும் அவர் சுமார் அரை­மணி நேரம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தா­கத் தெரி­கிறது.

இரு தரப்பும் தெலுங்கானா மாநிலத் தேர்தலை இணைந்து எதிர்கொள்வது குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.