தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கங்கை நதியில் இடிந்து விழுந்தது ரூ.1,717 கோடி செலவிலான பாலம்

2 mins read
7a5a0ebb-f37a-4e04-bdd7-625a69c1cba1
-

பாகல்­பூர்: பீகார் மாநி­லம், பாகல்­பூ­ரில் கங்கை ஆற்­றின் குறுக்கே ரூ.1,717 கோடி செல­வில் கட்­டப்­பட்டு வந்த அகு­வானி-சுல்­தங்­கஞ்ச் பாலம் இடிந்து விழுந்­தது.

சீட்­டுக்­கட்­டுப்­போல் பாலம் சரி­வ­தைக் கண்டு கங்கை கரை­யோ­ரம் நின்­று­கொண்­டி­ருந்­த­வர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். சிலர் இந்த தரு­ணத்தைக் காணொ­ளி­யாக எடுத்து சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றம் செய்­த­னர்.

பாகல்­பூ­ரில் இருந்து ககா­ரியா மாவட்­டத்தை இணைக்­கும் வகை­யில் மூன்று கிலோ மீட்­டர் நீளத்­துக்கு நான்கு வழிப் பால மாக இது கட்­டப்­பட்டு வந்­தது.

கடந்த 14 மாதங்­களில் இரண் டாவது முறை­யாக ஞாயி­றன்று மாலை பாலம் இடிந்து விழுந்­தது.

இந்­தச் சம்­ப­வம் நடந்­த­போது பாலம் அருகே நின்­றி­ருந்த பாது காவல் அதி­காரி ஒரு­வ­ரைக் காண­வில்லை என்­றும் அவ­ரைத் தேடும் பணி முடுக்­கி­வி­டப்­பட்டு உள்­ளது என்றும் கூறப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு டிசம்­பர் மாதத்­திற்­குள் பாலம் திறக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், அதிர்ச்­சி­யூட்­டும் இந்தச் ­சம்­ப­வம் குறித்து விசா­ரணை நடத்­து­வதற்கு பீகார் முதல்­வர் நிதீஷ்­கு­மார் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கட்­டு­மா­னப் பணி­யின் தரம் குறித்து பொறி­யா­ளர்­க­ளின் அறிக்கை கிடைத்­த­வு­டன் தவறு செய்­த­வர்­கள் மீது கடும் நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

பாலம் இடிந்து விழுந்­த­தற்கு பொறுப்­பேற்று முதல்­வர் நிதீஷ்­குமா­ரும் துணை முதல்­வர் தேஜஸ்வி யாத­வும் பதவி விலக வேண்­டும் என பீகார் மாநில பாஜக வலி­யு­றுத்தி உள்­ளது.

கட்­டு­மான ஊழலே பாலம் இடிவதற்குக் கார­ணம் என்று பீகார் எதிர்க்­கட்­சித் தலை­வர் விஜய்­கு­மார் சின்ஹா குற்­றம்­சாட்டி உள்­ளார்.

இது­கு­றித்து துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் செய்­தி­யா­ளா்­களி­டம் கூறு­கை­யில், "பாலத்­தின் வடி­வ­மைப்­பில் தீவிர குறை­பா­டு­கள் இருப்­ப­தாக நிபு­ணா்­கள் கூறியதைய­டுத்து, பாலத்­தின் சில பகு­தி­கள் இடிக்­கப்­பட்­டன. நிபுணா் குழு­வின் இறுதி அறிக்கை வந்­த­தும் பாலத்­தைக் கட்ட ஒப்­பந்­தம் எடுத்­துள்ள நிறு­வ­னத்­தின் மீது உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்­றார்.