தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

10 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
77e7cd80-bde5-406c-9f3b-439a31a7e048
-

மும்பை: மும்பை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய இரண்டு பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதித்தபோது எட்டு கிலோ தங்கக்கட்டிகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து வந்திறங்கிய ஒரு பயணியிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் 10 கிலோ எடை கொண்ட ரூ.6.2 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.