புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக் குறித்து சமாஜ்வாடி கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து டெல்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.

