சித்தராமையா: பசுவதைத் தடுப்புச் சட்டம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் அரசு அமைந்­துள்ள நிலை­யில், பாஜக ஆட்­சி­யில் அமுல்­படுத்­தப்­பட்ட பசு­வதைத் தடுப்பு சட்­டம், மத­மாற்றத் தடைச் சட்­டம், ஹிஜாப் தடை உள்­ளிட்­ட­வற்றை நீக்க மாநில அரசு முடி­வெ­டுத்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

இது­கு­றித்து கர்­நா­டக கால்­நடைத்­துறை அமைச்­சர் வெங்­க­டேஷ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறும்­போது, ‘‘விவ­சா­யி­க­ளின் நலனை கருத்­தில் கொண்டு பசு­வதைத் தடைச் சட்­டத்­தில் திருத்­தங்­கள் கொண்­டு­வர முடி­வெ­டுத்­துள்­ளோம்.

“இறைச்­சிக்­காக எரு­மை­களை வெட்­டும்­போது ஏன் பசுக்­களை வெட்­டக் கூடாது? அதில் என்ன தவறு இருக்­கிறது?’’ என கேள்வி எழுப்­பி­னார்.

இது­கு­றித்து முன்­னாள் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை கூறும்­போது, ‘‘பசு­வதைத் தடுப்புச் சட்­டத்தை நாங்­கள் கொண்­டு­வ­ர­வில்லை. ஏற்­கெ­னவே ஆட்­சி­யில் இருந்த காங்­கி­ரஸ் கொண்­டு­வந்த சட்­டத்­தையே திருத்­தி­னோம்.

“பாஜக ஆட்­சி­யில் கொண்­டு­வந்த திருத்­தங்­களை மாற்ற முடி­வெ­டுத்­தி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது. பசுவை தெய்­வ­மாக வணங்­கும் பழக்­கம் நம் நாட்­டில் உள்­ளது. இந்­துக்­க­ளுக்கு பசு­வு­டன் உணர்வு ரீதி­யான பிணைப்பு உள்­ளது. அத­னைக் கெடுக்­கும் வகை­யில் செயல்­பட்­டால் காங்­கி­ர­சுக்­குத் தக்க பாடம் புகட்­டப்படும்,’’ என்­றார்.

இந்­நி­லை­யில், கர்­நா­டக அர­சை­யும் முதல்­வர் சித்­த­ரா­மை­யா­வை­யும் கண்­டித்து இளை­ஞர் பாஜ­க­வி­னர் பெங்­க­ளூரு, மைசூரு, மங்­க­ளூரு, ஷிமோகா உள்­ளிட்ட இடங்­களில் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது பசு­வ­தைத் தடுப்புச் சட்­டத்தை நீக்­கக்­கூ­டாது என முழக்­கம் எழுப்­பி­னர்.

இது­கு­றித்து கர்­நா­டக முதல்­வர் சித்­த­ரா­மை­யா­வி­டம் (படம்) செய்­தி­யா­ளர்­கள் கேட்­ட­போது, ‘‘இந்த சட்­டம் குறித்து இது­வரை எந்த முடி­வும் எடுக்­க­வில்லை. விரை­வில் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் விவா­திக்க இருக்­கி­றோம்,’’ என்­று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!