ரயில் விபத்து: அதிகாரிகளின் கைப்பேசிகள் பறிமுதல்

ரயில் விபத்து: அதிகாரிகளின் கைப்பேசிகள் பறிமுதல்

2 mins read
1434827a-8745-4ac7-97c2-267ad3917ea0
விபத்­தின்­போது பணி­யில் இருந்த ரயில்வே துறை அதி­கா­ரி­கள் சில­ரின் கைப்­பே­சி­களை சிபிஐ அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

சிபிஐ அதிரடி நடவடிக்கை: ரயில்வே ஊழியர்கள், ஒப்பந்தப் பணியாளர்களிடம் தீவிர விசாரணை

பாலேஸ்வர்: ஒடிசா மாவட்­டம் பாலேஸ்வர் அருகே கடந்த 2ஆம் தேதி நிகழ்ந்த ரயில் விபத்­தில் 278 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

ரயில் விபத்து தொடர்­பாக தென்­கி­ழக்கு வட்­டார ரயில்வே துறை பாது­காப்பு ஆணை­யர் ஏ.எம்.சௌத்­திரி விசா­ரணை நடத்­தி­னார். விபத்­துக்­குள்­ளான ரயில்­களை இயக்­கி­ய­வர்­கள் விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாக அழைப்­பாணை அனுப்பி உள்­ளார். இந்த விபத்து தொடர்­பாக ரயில் இயக்­கு­நர்­கள், ஒப்­பந்­தப் பணி­யா­ளர்­கள் உள்­ளிட்ட 55 பேரி­டம் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கிறது.

இந்­நி­லை­யில், இந்த விபத்து குறித்து சிபிஐ விசா­ரணை நடத்த ஒடிசா அர­சின் ஒப்­பு­த­லு­டன் ரயில்வே அமைச்­சு பரிந்­து­ரைத்­தது.

இதை­ய­டுத்து திங்­கள்­கி­ழமை சம்­பவ இடத்­தில் ஆய்வு மேற்­கொண்ட சிபிஐ அதி­கா­ரி­கள், விபத்து குறித்து நான்கு பிரி­வு­க­ளின்கீழ் செவ்­வாய்க்­கி­ழமை வழக்­குப் பதிவு செய்­தனர்.

இதன் தொடர்ச்­சி­யாக, விபத்­தின்­போது பணி­யில் இருந்த ரயில்வே துறை அதி­கா­ரி­கள் சில­ரின் கைப்­பே­சி­களை சிபிஐ அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட கைப்­பே­சி­களில் பதி­வாகி உள்ள உரை­யா­டல்­கள், அழைப்­பு­கள், சமூக ஊடகப் பயன்­பாடு உள்­ளிட்­டவை தொடர்­பாக ஆய்வு மேற்­கொள்­ளும் நோக்­கில் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மேலும், புவனேஸ்­வர் எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரும் ரயில் இயக்குநரிடம் விசா­ரணை நடத்­த­வும் சிபிஐ திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ரயில் விபத்­தில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் படு­கா­ய­மடைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இன்­னும் 83 பேரின் உடல்­கள் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்து, அவர்­க­ளது உற­வி­னர்­க­ளின் மரபணு மாதி­ரி­யைப் பெறும் முயற்­சி­யில் ஒடிசா மாநில அரசு ஈடு­பட்டு வரு­கிறது. இது­வரை 33 பேரின் மரபணு மாதி­ரி­களை அதி­கா­ரி­கள் புவனேஷ்­வர் எய்ம்ஸ் மருத்­து­வ­மனைக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் காய­மடைந்­த­வர்­க­ளுக்­கும் மத்­திய, மாநில அர­சு­களும் ரயில்வே துறை­யும் இழப்­பீடு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தன.

அதன்­படி, 688 பேருக்கு ஏறக்­கு­றைய ரூ.19.26 கோடி இழப்­பீட்­டுத் தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது என தென்­கி­ழக்கு வட்­டார ரயில்வே துறை தெரி­வித்­துள்­ளது.