அனுராக் தாக்கூரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்த மல்யுத்த வீரர்கள்

அனுராக் தாக்கூரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்த மல்யுத்த வீரர்கள்

2 mins read
2d0fecd6-8e9d-4410-b765-688b88f2acf9
-

புது­டெல்லி: மல்­யுத்த கூட்­ட­மைப்­பின் தலை­வர் பிரிஜ் பூஷண் சரண் சிங்­குக்கு எதி­ரான பாலி­யல் குற்­றச்­சாட்­டில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து அவ­ரைக் கைது­செய்ய வேண்­டும் என்று டெல்­லி­யில் உள்ள ஜந்­தர் மந்­த­ரில் மல்­யுத்த வீராங்­க­னை­கள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், மல்­யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்­ளிட்­டோர் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வந்­த­னர்.

இந்­நி­லை­யில், இந்­திய விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் அனு­ராக் தாக்­கூர், போராட்­டத்­தைக் கைவிட்டு பேச்­சு­வார்த்­தைக்கு வந்­தால் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­கா­ண­லாம் என்று மல்­யுத்த வீரர்­க­ளுக்கு டுவிட்­டர் பதிவு வாயி­லாக அழைப்பு விடுத்­தார். அதை­ய­டுத்து மல்­யுத்த வீரர்­கள் சாக்‌ஷி மாலிக், பஜ்­ரங் புனியா மற்­றும் சத்­யா­வார்ட் கடி­யன் உள்­ளிட்­டோர், புது­டெல்­லி­யில் உள்ள அமைச்­சர் அனு­ராக் தாக்­கூரை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.

இந்­தச் சந்­திப்­பில் மல்­யுத்த வீராங்­கனை வினேஷ் போகாட் கலந்­து­கொள்­ள­வில்லை என்று அமைச்­சர் தாக்­கூ­ரின் அலு­வ­லக அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஹரி­யா­னா­வின் பலா­லி­யில் நடை­பெ­றும் பஞ்­சா­யத்­தில் பங்­கேற்க வினேஷ் போகாட் சென்­றி­ருப்­ப­தால் இந்­தச் சந்­திப்­பில் அவ­ரால் கலந்­து­கொள்ள முடி­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய அர­சுக்­கும் மல்­யுத்த வீரர்­க­ளுக்­கும் இடையே பேச்­சு­வார்த்தை நடப்­பது இது இரண்­டா­வது முறை­யா­கும்.

சந்­திப்­பின்­போது, அமைச்­சர் தாக்­கூ­ரி­டம் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­னர்.

 மல்­யுத்த கூட்­ட­மைப்­பின் தேர்­தலை வெளிப்­ப­டை­யாக நடத்த வேண்­டும்.

 மல்­யுத்த கூட்­ட­மைப்­பின் தலை­வ­ராக பெண் ஒரு­வர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும்.

 தற்­போ­தைய தலை­வர் பிரிஜ் பூஷண் சரண் சிங்­கிற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்

 மல்­யுத்த கூட்­ட­மைப்­பில் பிரிஜ் பூஷன் சிங்­கின் குடும்­பத்­தி­னர் யாரும் இடம்­பெ­றக் கூடாது

 கடந்த 28ம் தேதி நடந்த போராட்­டத்தை அடுத்து தங்­கள் மீது பதி­யப்­பட்ட வழக்­கு­களை திரும்­பப் பெற வேண்­டும்.

இந்த ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­னர். இந்­தக் கோரிக்­கை­கள் குறித்து அரசு தரப்­பில் உடனடியாக தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

முன்­ன­தாக கடந்த சனிக்­கி­ழமை இரவு மல்­யுத்த வீரர்­களும் அவர்­க­ளின் பயிற்­று­விப்­பா­ளர்­களும் இணைந்து மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்­ஷாவை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர்.