ஜம்மு-­காஷ்மீரில் ஏழுமலையான் கோயில் திறப்பு

1 mins read
0185dcca-1372-43d0-b7a1-135e6a115085
-

ஸ்ரீநகர்: ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்குக் கட்டப்படும் 6வது கோவிலின் கும்பாபிஷேக விழா ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடைபெற்றது. இக்கோயிலை உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் ரூ.725 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.