போபால்: மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை 55 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
இங்குள்ள மொகவாலி கிரா மத்தில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் இம்மாதம் 6ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிருஷ்டி குஷ்வாஹா தவறி விழுந்தாள். ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், இயந்திர மனித நிபுணர்கள் ஆகியோர் சேர்ந்து குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.