ஒடிசா: ஒடிசாவின் சரக்கு ரயில் விபத்தில் பலியான ஆறு தொழிலாளர்களின் குடும்பத்தினருக் குத் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறி வித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்.
அத்துடன், காயமடைந்த இரு வருக்கு உயரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர். ஒடிசாவின் ஜஜ்பூா் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கனமழை பெய்ததால் சரக்கு ரயிலின் கீழ் ஒதுங்கியுள்ளனர். இயந்திரம் இணைக்கப்படாத அந்த ரயில், காற்றின் வேகத்தில் நகரத் தொடங்கியதில் ரயில் பெட்டிகள் சாய்ந்து ஆறு தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

