'ரூ.500ஐ திரும்பப் பெற்று, ரூ.1000ஐ அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை'

'ரூ.500ஐ திரும்பப் பெற்று, ரூ.1000ஐ அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை'

1 mins read
9603e614-43c7-47c9-8926-748b128bb568
-

மும்பை: 500 ரூபாய் நோட்டு களைத் திரும்­பப் பெற்­றுக்­கொள்­ளும் எண்­ணமோ அல்­லது ரூ.1000 நோட்­டு­களை மீண்­டும் அறி­மு­கப்­ப­டுத்­தும் எண்­ணமோ இல்லை என்று ரிசர்வ் வங்­கி­யின் ஆளு­நர் சக்­தி­காந்த தாஸ் திட்ட வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

மும்­பை­யில் நடை­பெற்ற நிதி கொள்­கைக் குழு கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் குறித்து நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் விவ­ரித்த அவர், "நடப்பு நிதி­யாண்­டில் நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 6.5 விழுக்­கா­டாக இருக்­கும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது.

"திரும்­பப் பெறப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்ட ரூ.2000 நோட்டு களில் 50 விழுக்­காடு நோட்­டு­கள் வங்­கி­களை வந்து சேர்ந்­துள்­ளன. இது­வரை ரூ1.80 லட்­சம் கோடி மதிப்­பி­லான ரூ.2,000 நோட்­டு­கள் திரும்பி வந்­துள்­ளன. ரூ.2,000 நோட்­டு­களை மாற்­றிக்­கொள்­வ­தற்கு அவ­ச­ரப்­பட வேண்­டாம். ஆனால், செப்­டம்­பர் மாதத்­தின் கடைசி நாள்­கள் வரை காத்­தி­ருக்­க­வேண்­டாம்," என அவர் அறி­வு­றுத்தி உள்­ளார்.

வங்­கி­க­ளுக்கு ரிசர்வ் வங்கி வழங்­கும் குறு­கிய கால கடன் களுக்­கான ரெப்போ வட்டி விகி தத்­தில் மாற்­ற­மில்லை என்­ப­தால், வீட்­டுக்­க­டன் மீதான வட்­டி­யி­லும் எந்த மாற்­ற­மும் இல்லை என சக்தி காந்­த­தாஸ் கூறி­யுள்­ளார்.