'வெறுப்புப் பிரசாரத்தில் மல்யுத்த வீராங்கனைகள் ஈடுபடவில்லை'

1 mins read
88f640e4-a6b4-4e1c-9623-2d70409d24d4
-

புது­டெல்லி: மல்­யுத்த வீராங்­க­னை­க­ளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்­ரங் புனியா ஆகி­யோ­ருக்கு எதி­ராக வெறுப்­புப் பேச்சு புகார், பொய்­யான குற்­றச்­சாட்டு கூறி­ய­தற்­காக வழக்­குப் பதிவு செய்­யக்­கோரி டெல்லி நீதி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அம்­ம­னு­விற்குப் பதில் அளிக்­கும்­வி­த­மாக அது தொடர்­பாக எடுத்த நட­வ­டிக்­கை­கள் குறித்த அறிக்­கையை நீதி­மன்­றத்­தில் டெல்லி காவல்­துறை அதி­கா­ரி­கள் தாக்­கல் செய்­த­னர்.

காவல்­துறை தாக்­கல் செய்த அறிக்­கை­யில், "டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் நடந்த போராட்­டத்­தின்­போது மல்­யுத்த வீராங்­க­னை­கள் பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு எதி­ராக எழுப்­பிய முழக்­கம், வெறுக்­கத்­தக்க பேச்சு வகை­யின் கீழ் வரக்­கூ­டி­யது.

இது அவர்­கள் பிர­த­மரை கொலை­செய்­யப் போவ­தாக மிரட்­டி­ய­தைத் தெளி­வாக உணர்த்­தி­யது," என்று புகார்­தா­ரர் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், புகார்­தா­ரர் ஆதா­ர­மாக அளித்­தி­ருந்த காணொ­ளிக் காட்­சி­களில் எந்­த­வி­த­மான வெறுக்­கத்­தக்க முழக்­கங்­களும் இல்லை.

போராட்­டத்­தில் ஈடு­பட்ட மல்­யுத்த வீராங்­க­னை­கள், வீரர்­கள் அது­போன்ற முழக்­கங்­க­ளை­யும் எழுப்­ப­வில்லை என்று தெரி­வித்­துள்­ளது. மேலும் வீரர்­கள் மீதான அந்த புகார் மனுவைத் தள்­ளு­ப­டி­ செய்­ய­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.