24 விரைவு ரயில்கள் ரத்து; 82 சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம்

24 விரைவு ரயில்கள் ரத்து; 82 சடலங்களை அடையாளம் காண்பதில் சிரமம்

1 mins read
fc16acc3-049c-4b39-b748-64c7bb7b0e5e
-

ரயில் விபத்­தின் எதி­ரொ­லி­யாக நாட்­டின் தென்­கி­ழக்­குப் பகு­தி­யில் 24 விரைவு ரயில்­க­ளின் சேவை நேற்று ரத்து செய்­யப்­பட்­ட­தாக ரயில்வே நிர்­வா­கம் கூறி­யது.

பாஹா­நகா பஜார் ரயில் நிலை­யத்­தில் பரா­ம­ரிப்­புப் பணி­கள் நடை­பெ­று­வ­தால் ரயில்­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக ரயில்வே நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

ரயில் விபத்­துக்­குள்­ளான பகு­தி­யில் ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்­பும் மாற்­றப்­ப­டு­வ­தா­க­வும் ரயில்வே நிர்­வா­கம் விளக்­க­ம­ளித்­துள்­ளது.

ஒடி­சா­வில் ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்­கள் மோதி 288 போ் உயி­ரி­ழந்த சம்­ப­வம் நடை­பெற்ற பாஹா­நகா பஜாா் ரயில் நிலை­யத்தை சிபிஐ அதி­கா­ரி­கள் மூடி சீல் வைத்­துள்­ள­தால் அங்கு ரயில்­கள் நிற்­கா­மல் செல்­கின்­றன.

இதற்­கி­டையே, விபத்து நிகழ்ந்து ஒரு வாரத்­துக்­குப் பிற­கும் இன்­னும் 82 பேரின் உடல்­கள் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்லை என்­றும் அதில் சிர­மங்­கள் உள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"பெரும்­பா­லான சட­லங்­கள் அடை­யா­ளம் காண முடி­யாத அள­வுக்கு உருக்­கு­லைந்­துள்­ளன. எனவே மர­ப­ணுச் சோதனை அறிக்­கைக்­காக 82 பேரின் உற­வி­னர்­களும் காத்­தி­ருக்­கின்­ற­னர்," என்று அந்த அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறினர்.