புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் ரூ. 155 லட்சம் கோடியாக உயர்ந்து விட்டதாகவும் இதனால் ஒவ்வொரு குடிமகனுக்கான கடன் சுமை ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர் பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், மோடி தலைமை யிலான ஒன்பதாண்டு கால ஆட்சியில் நாட்டின் கடன் சுமை மும்மடங்கு அதிகரித்து உள்ளது என்று குற்றம் சாட்டி னார். அதனால் பொருளியல் நிலையை விளக்கி அரசாங்கம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் கோரினார்.
மோடி அரசாங்கத்தின் தவறான நிர்வாகமே பொருளி யலின் தற்போதைய நிலைக்கு காரணம் என்றும் சுப்ரியா குறைகூறினார்.

