திருவனந்தபுரம்: பாதுகாப்பான கேரளம்' என்ற திட்டத்தின்கீழ் கேரள மாநிலம் முழுவதும் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாகன இயக்கங்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போக்குவரத்து அமைச்சா் ஆன்டனி ராஜு தலைமையில் சனிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கேரளத்தில் சராசரியாக தினசரி 12 சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்த பின்னா் உயிரழப்பு 5க்கும் 8க்கும் இடைப்பட்ட எண்ணிக்கைக்குக் குறைந்துள்ளது," என்றார்.
செப்டம்பா் 1ஆம் தேதி முதல் காா்களில் ஓட்டுநா் மட்டுமின்றி, முன் இருக்கையில் அமா்ந்திருக்கும் பயணியும் இருக்கை வார் (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது என்றும் அவா் கூறினாா்.

