மனைவி, குழந்தைகள் உட்பட ஐவரை கொன்றவருக்கு தூக்கு உறுதி

மனைவி, குழந்தைகள் உட்பட ஐவரை கொன்றவருக்கு தூக்கு உறுதி

1 mins read
d7fe220b-7e8c-484c-9aa6-aa04de22c218
-

மைசூரு: கர்­நா­டக மாநி­லம் பெல்­லாரி மாவட்­டத்­தின் கெஞ்­ச­ன­குடா ஹள்­ளி­யைச் சோ்ந்த பைலூரு திப்­பையா என்­பவா், தமது மனைவி பகீ­ரம்­மா­வின் நடத்­தை­யில் சந்­தே­கப்­பட்­டார். இத்­தம்­ப­திக்கு 4 குழந்­தை­கள் இருந்த நிலை­யில், அதில் 3 குழந்­தை­கள் தனக்கு பிறந்­ததல்ல என திப்­பையா சண்­டை­யிட்டு வந்தாா்.

பிரச்­சினை முற்­றி­ய­தில், 2017 பிப்­ர­வரி 25ஆம் தேதி தமது மனை­வியை வெட்­டிக் கொன்ற திப்­பையா, மனை­வி­யின் சகோ­தரி கங்­கம்மா மற்­றும் 10 வய­துக்கு உள்­பட்ட தமது 3 குழந்­தை­க­ளை­யும் சர­மா­ரி­யாக வெட்­டிக் கொன்றாா்.

வழக்கை விசா­ரித்த பெல்­லாரி அமா்வு நீதி­மன்­றம், திப்­பை­யா­வுக்கு தூக்­குத் தண்­டனை விதித்து 2019 டிசம்பா் 3ல் தீா்ப்ப­ளித்­தது.

இத்­தீா்ப்­புக்கு எதி­ராக கா்நாடக உயா்நீ­தி­மன்­றத்­தில் திப்­பையா மேல்­மு­றை­யீடு செய்தாா். இந்த வழக்­கில் கடந்த நவம்­ப­ரில் விசா­ர­ணையை நிறைவு செய்த உயா்நீ­தி­மன்­றம், தீா்ப்பை ஒத்­தி­வைத்­தி­ருந்­தது. இந்­நி­லை­யில், திப்­பை­யா­வுக்கு விதிக்­கப்­பட்ட தூக்­குத் தண்­ட­னையை உறுதி செய்து உயா்நீ­தி­மன்­றம் தீா்ப்ப­ளித்­துள்­ளது.

"மூன்று குழந்தைகள் உள்பட ஐவர் கொலை செய்யப்பட்ட குற்றத்தின் தீவிரம், கொடூரமான விதம் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், குற்றவாளிக்கு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை," என்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது.