வெளிநாடுவாழ் மலையாளி நலனுக்கான தொகை பெருகியது

வெளிநாடுவாழ் மலையாளி நலனுக்கான தொகை பெருகியது

1 mins read
8cd013e2-bab4-4c4c-94f3-4a3be55513d9
-

நியூ­யார்க்: வெளி­நா­டு­களில் வசிக்­கும் தமது மாநில மக்­க­ளுக்­காக வேலை வாய்ப்­ப­கம் அமைக்­கப்­பட இருப்­ப­தாக கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் அறி­வித்­துள்­ளார்.

நியூ­யார்க் நக­ரில் இடம்­பெற்ற ஒரு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட திரு விஜ­யன், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கேரளா திரும்­பி­யோ­ரும் இப்­போது வெளி­நா­டு­களில் வசிப்­போ­ரும் அந்த வேலை­வாய்ப்பு இணை­யத்­த­ளத்­தில் பதி­வு­செய்­ய­லாம் என்று குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, வரு­வாய்த் துறை தொடர்­பில் ஏதே­னும் மனக்­குறை இருந்­தால் அது­பற்றி புகார் தெரி­விக்க வெளி­நா­டு­வாழ் மலை­யா­ளி­க­ளுக்­கென 'பிர­வாசி மித்­ரம்' எனும் இணை­ய­வா­யிலை கேரள அர­சாங்­கம் தொடங்கி இருக்­கிறது.

வெளி­நா­டு­வாழ் மலை­யா­ளி­க­ளுக்­கான விரி­வான காப்­பு­று­தித் திட்­டத்­தைத் தொடங்­கும் பணி­யும் இறு­திக்­கட்­டத்­தில் இருப்­ப­தாக முதல்­வர் விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

வெளி­நா­டு­வாழ் மலை­யா­ளி­கள் விவ­கா­ரத் துறைக்­காக (நோர்க்கா) ஒதுக்­கப்­படும் தொகை கடந்த ஏழாண்­டு­களில் ஐந்து மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

சட்­ட­பூர்­வ­மா­க­வும் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னும் பாது­காப்­பா­க­வும் செயல்­படும் அமைப்­பு­கள் மூல­மாக கேரள மக்­கள் வெளி­நாடு செல்ல 'நோர்க்கா ரூட்ஸ்' அமைப்­பின் ஆட்­சேர்ப்­புப் பிரிவு உதவி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அவ்­வ­கை­யில், விருந்­தோம்­பல், சுற்­றுப்­ப­ய­ணத் துறை­யில் ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்கை இவ்­வாண்டு அக்­டோ­ப­ரில் இடம்­பெறும் என்று அவர் கூறியுள்ளார்.