நொய்டா: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப் பட நகர் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு அமைந்து உள்ள ஸ்டூடியோவில் ஞாயிற்றுக்கிழமை 'பேஷன் ஷோ' நடைபெற்றது.
24 வயது வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப் வாக் சென்றபோது எதிர் பாராதவிதமாக அங்கிருந்த இரும்புத் தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடல் அழகி பலியானார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து 'பேஷன் ஷோ' ரத்து செய்யப்பட்டு, ஏற்பாட் டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

