புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடும் போக்கு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய கூட்ட நடவடிக்கை குறிப்புகளில் இருந்து இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
2021-22 கல்வி ஆண்டில் உயர்நிலைப்பள்ளி அளவில் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடுவது பீகார் மாநிலத்தில் 20.46 விழுக்காடாகவும் குஜராத்தில் 17.85 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
அதற்கு அடுத்த நிலையில் அசாமில் 20.3 விழுக்காடு, ஆந்திராவில் 16.7 விழுக்காடு, பஞ்சாப்பில் 17.2 விழுக்காடு, மேகாலயாவில் 21.7 விழுக்காடு, கர்நாடகத்தில் 14.6 விழுக்காடு அதிகரித்து உள்ளதை நடவடிக்கைக் குறிப்புகள் காட்டின.
இந்த ஏழு மாநிலங்களில் மாணவர்கள் இடையிலேயே படிப்பைக் கைவிடுவது தேசிய சராசரியான 12.6 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம் ஆகும்.
தென்னிந்திய மாநிலங்களில் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் மட்டுமே உயர்நிலைப் படிப்பைக் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் அந்தப் போக்கு குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

