புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலேஷ்வர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2ஆம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சங்கிலித்தொடர் விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் இதில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பத்து பேர் அடங்கிய சிபிஐ குழு ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட ஐவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சமிக்ஞை பொறியாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

