மும்பை: மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் விக்ரம் காட் பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் தாக்கரே, 20, அவரது நண்பர் நரேஷ் போயிர், 22, உறவினர் மயூர் தாக்கரே, 19. இவர்கள் மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலை சாத்திவிலி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கிவீசப்பட்ட மூவரும் உயிரிழந்தனர். லாரி ஓட்டு நர் தப்பிஓடிவிட்டார்.
லாரி மோதி 3 இளையர்கள் பலி
1 mins read
-

