கவுகாத்தி: அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்ட பாஜக செயலாளர் ஜோலினி நாத் நேற்றுக் காலை சல்பரா பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயிரிழந்தது பாஜக தலைவி ஜோலினி நாத் (படம்) என்பது தெரியவந்தது. அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பாஜக தலைவி கொலை; சாலையோரம் சடலம்
1 mins read
-

