புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டில் நடக்க உள்ளது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10 மத்திய அமைச்சர்கள் உள்பட 18 மேலவை உறுப்பினர்களை நேரடியாக போட்டியிட வைக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, ஹர்தீப் பூரி, ஜெய்சங்கர், புருஷோத்தம் ரூபாலா உள்ளிட்ட பல பெயர்கள் அடிபடுகின்றன.
ஜெய்சங்கர் புதுடெல்லி தொகுதியிலும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

