மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 11 பேர் பலி; பலர் காயம்

மணிப்பூரில் மீண்டும் கலவரம்; 11 பேர் பலி; பலர் காயம்

1 mins read
72249fb0-b67a-40d0-8307-0a0d37ace7d9
-

இம்­பால்: இந்­தி­யா­வின் வட­கிழக்கு மாநி­ல­மான மணிப்­பூ­ரில்­மீண்­டும் கல­வ­ரம் வெடித்து 11 பேர் உயி­ரி­ழந்­ததை அடுத்து பணிக்­குத் திரும்­பும்­படி விடுப்பில் இருக்­கும் காவல்­து­றை­யின ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டு உள்­ளது.

வன்­மு­றை­யால் பாதிக்­கப்­பட்ட மணிப்­பூ­ரின் இம்­பால் கிழக்கு மாவட்­டத்­தில் உள்ள காமன்­லோக் என்ற இடத்­தில் செவ்வாய்க்கிழமை நள்­ளி­ரவு நடந்த தாக்­கு­த­லில் குறைந்­தது 11 கிராம மக்­கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். காய­ம­டைந்த பலர் அரசு, தனி­யார் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அவர்களில் பலரும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தால் பலி எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் என வட்­டா­ரங்­கள் தெரி­வித்தன.