அகமதாபாத்: அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிபர்ஜாய் புயல், குஜராத் மாநில கட்ச் வளைகுடா பகுதியில் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் குஜராத்தில் 20,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் முழு விழிப்பு நிலையில் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

