மல்லா ரெட்டியின் நல்ல தொண்டுக்குப் பாராட்டு, பாலாபிஷேகம்

மல்லா ரெட்டியின் நல்ல தொண்டுக்குப் பாராட்டு, பாலாபிஷேகம்

1 mins read
8876541f-c960-46f2-93a1-d73375cc6524
-
multi-img1 of 2

திருப்­பதி: தெலுங்­கானா மாநில தொழி­லா­ளர் நல அமைச்­சர் மல்லா ரெட்டி. இவர் நேற்று பல்வேறு நிகழ்ச்­சி­களில் கலந்து கொள்­வ­தற்­காக மக­பூப்­ நகருக்குச் சென்­றார். அவ­ரு­டன் கலால் துறை அமைச்­சர் சீனி­வாஸ் உடன் சென்­றார்.

அமைச்­சர்­களை வர­வேற்க பொது­மக்­கள் பல்­வேறு ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்­த­னர்.

அமைச்­சர்­க­ளுக்கு ஆரத்தி எடுத்து அவர்­களை ஒரு நாற்­கா­லி­யில் அமர வைத்து பொது­மக்­கள் வரி­சை­யாக வந்து பாலா­பி­ஷே­கம் செய்­த­னர். தொடர்ந்து மாலை அணி­வித்து அவர்களுக்கு மரி­யாதை செலுத்­தி­னர்.

"அமைச்­சர் மல்­லா­ ரெட்டி எங்கள் பகு­தி­யில் பல்­வேறு நல்ல பணி­களைச் செய்து வரு­கி­றார். அவ­ருக்கு நன்றி தெரி­விக்­கும் வித­மாக பாலா­பி­ஷே­கம் செய்­தோம்," என்று மக்­கள் மகிழ்ச்சியுடன் தெரி­வித்­த­னர்.

அபி­ஷே­கத்தைத் தொடர்ந்து அமைச்­சர்­கள் வேறு உடை­யில் வந்­த­னர். விருது வழங்­கும் விழா­வில் கலந்­து­கொண்­ட­னர்.

அமைச்­சர் மல்லா ரெட்டி திரைப்­பட பாடல் ஒன்­றுக்கு நட­னம் ஆடி­னார். பொதுமக்களும் சேர்ந்து ஆடி அமைச்சருக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.