புதுடெல்லி: இந்திய-சீன எல்லை அருகே இந்தியாவின் என்எச்பிசி சார்பில் கட்டப்பட்டு வரும் சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஜூலையில் தொடங்கவுள்ளதாக திட்ட இயக்குநர் ராஜேந்திர பிரசாத் கோயல் தெரிவித்தார்.சுபன்சிரி மெகா நீர்மின் திட்டத்தின் முதல் பிரிவு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 இறுதிக்குள் அதன் எட்டு அலகுகளும் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார். 2 ஜிகாவாட் திறன் கொண்ட இத்திட்டம் கடந்த 2003ஆம் ஆண்டு தொடங்கியது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்தத் திட்டத்துக்கான செலவு மூன்று மடங்காக (ரூ.21,413 கோடி) உயர்ந்தது.
சீன எல்லை அருகே நீர் மின்திட்டம்: ஜூலையில் சோதனை
15 Jun 2023 - 5:30 am
1 mins read
