சினைப் பசு வயிற்றில் 60 கிலோ பிளாஸ்டிக்: தாயும் கன்றும் பலி

சினைப் பசு வயிற்றில் 60 கிலோ பிளாஸ்டிக்: தாயும் கன்றும் பலி

1 mins read
b0559b8a-77ba-4ab0-9f2e-2d62854fdfb6
-

திருப்­பதி: ஆந்­திர மாநி­லம் நந்­தி­யால் நக­ரப்­ப­கு­தி­யில் எட்டு மாத சினைப் பசு ஒன்று நடக்க முடி­யா­மல், சாணம், கோமி­யம் கழிக்க முடி­யா­மல் அவ­திப்­பட்­டதை அடுத்து மருத்­து­வர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

கால்­நடை மருத்­து­வர்­கள் சம்­பவ இடத்­திற்­குச் சென்று சினைப் பசுவை இயந்­திர வாகனம் மூலம் மீட்டு கால்­நடை மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர். பசு­வின் வயிற்­றில் இருந்து 60 கிலோ பிளாஸ்­டிக் கழி­வு­கள் அகற்­றப்­பட்­டன.

பசு­வின் வயிற்­றில் இருந்த கன்­று, இயற்­கை­யான உணவு கிடைக்­கா­த­தால் இறந்து இருந்­தது. தொடர்ந்து பசு­வும் பலி­யா­னது. உணவுப்பொருளோடு பிளாஸ்டிக் பொருள்களையும் பசு சாப்பிட்டதாகத் தெரியவந்தது.