இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஆகாயப் படை விமான இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஏற்பாடு

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஆகாயப் படை விமான இயந்திரங்களை உற்பத்தி செய்ய ஏற்பாடு

1 mins read
65c57799-0243-4d0b-91b5-9e5fd7ec9680
படம்: ஏஎஃப்பி -

வாஷிங்டன்: ஆகாயப் படை விமானங்களை இணைந்து உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு நேர்ந்தால் அந்த ஒப்பந்தத்தின்கீழ் ஆகாயப் படை விமான இயந்திரங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்.

இன்னும் சில நாள்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

அப்போது இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு வலுவடைவதற்கான அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.