குஜராத்தைத் தாக்கிய பிப்பார்ஜோய் சூறாவளி

குஜராத்தைத் தாக்கிய பிப்பார்ஜோய் சூறாவளி

1 mins read
e005ccdd-a47e-41fb-9654-4245c677d161
சூறாவளி தாக்குவதற்கு முன்பு காணப்பட்ட கார்மேகங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

அகமதாபாத்: பிப்பார்ஜோய் சூறாவளி வியாழக்கிழமையன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தைத் தாக்கியது.

கடற்கரை நகரான ஜாக்காவை சூறவாளி முதலில் தாக்கியது.

மிக மோசமான சூறாவளியாக பிப்பார்ஜோய் வகைப்படுத்தப்பட்டடிருந்தது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் அது குஜராத்தைத் தாக்கியது.

மணிக்கு 50லிருந்து 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சில தகவல்கள் தெரிவித்தன.

சூறாவளி தாக்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கையாக கடற்கரைப் பகுதிகளில் வசித்த சுமார் 100,000 மக்கள் இடம் மாற்றப்பட்டனர்.