புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது ஏழு மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்தனர்.
அவர்களில் சட்டப்படியான வயதை எட்டாத ஒருவரும் அடங்குவார். அந்தப் பதின்ம வயது சிறுமி தாக்கல் செய்த புகாரில் போதுமான ஆதாரம் இல்லை என்று நேற்று புதுடெல்லி காவல்துறை தாக்கல் செய்த அறிக்கை தெரிவித்தது.
ஆகையால், பிரிஜ்பூஷணுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 4ஆம் தேதி நடக்கும்.